மோட்டர் வாகனச் சட்டம்
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும்
- டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராதம் - ரூ 500.
- உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது - அபராதம் - ரூ.5000 அபராதம்
- சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் - ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்த சிறார் 25 வயது ஆகும்வரை, எல்.எல். கூட வாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.
- ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் - ரூ.10,000 அபராதம்
- அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் - ரூ 1,000 - ரூ 2,000 அபராதம். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் உரிமம் பறிக்கப்படும்.
- ஆபத்து ஏற்படும் வகையில் அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் - 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை. இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ 10,000 வரை அபராதம்.
- அபாயகரமாக ஓட்டுதல் - 6 - 12 மாதம் வரை சிறைத்தண்டனை; ரூ.1,௦௦௦ - 5000 அபராதம்
- விதி மீறல் (உதாரணம் - சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல்) - ரூ.1000 அபராதம்; 3 மாதங்களுக்கு உரிமம் பறிக்கப்படும்.
- குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் - 6 மாதம் வரை சிறைத்தண்டனை; ரூ.10,000 அபராதம்
- மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் - ரூ. 1000 - 2000 அபராதம்
- போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல் - 1 மாதம் வரை சிறைத்தண்டனை; ரூ 500 அபராதம்
- காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் (uninsured) - ரூ.2000 அபராதம்
- இரு சக்கர வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு (2 பேர்) கூடுதல் நபர்களுடன் ஓட்டுதல் - ரூ.2000 அபராதம்; 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து.
- போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் - ரூ. 500 அபராதம்....
- தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் - ரூ.1000 அபராதம்; 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து.
- சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் - ரூ.1000 அபராதம்;
ஆதாரம் : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை காவல்துறை
Social Plugin