தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்
இந்தியாவின் பாதுகாப்பு எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகளாலும், இந்தியாவிற்கு உள்ளேயிருந்து மாவோயிஸ்ட் இயக்கத்தாலும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை முறியடிக்கவும், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த மத்திய அரசு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்த முடிவு செய்தது.
அதில், தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரை தலைவராகக் கொண்டு செயல்படும் என்றும், பயங்கரவாத செயல்களைத் தடுப்பதற்காக ஐயத்திற்கிடமான வகையில் செயல்படுவோரைக் கைது செய்யும் அதிகாரம் இந்த மையத்திற்கு உண்டு என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணை வெளியிடப்பட்டதுமே, இதற்கு எதிராக எதிர்க்கட்சி, ஆளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடும் செயல் என்றும், கூட்டாட்சி தத்துவத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என்றும் முதலமைச்சர்கள் குற்றம் சாட்டினர்.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நமது பொது இலக்கை எட்டுவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு கருவிதான் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஆகும்.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அமைச்சர்கள் குழு பரிந்துரை, நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை, கார்கில் போரிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் ஆகியவற்றில் இருந்துதான் ஏற்பட்டது.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் வடிவம் மற்றும் செயல்பாட்டு அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது மாநில அரசுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு துணையாக இருக்குமே தவிர, மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இருக்காது என்பது எங்களின் நம்பிக்கையாகும். பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பெரிய தோற்றத்தை ஒவ்வொரு மாநில காவல்துறைக்கும் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் வழங்கும். இதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கான மாநில காவல்துறையின் திறனை மேம்படுத்துவதுடன், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்குத் தேவையான வளங்களையும் பயங்கரவாத தடுப்பு மையம் வழங்கும்.
தேசிய சக்திகளையும் ஒருங்கிணைத்து பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரம் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு எஃப்.பி.ஐ. என்ற புலனாய்வு அமைப்பும், ரகசிய அமைப்புகளும் உள்ளன.
இந்தியாவை பொறுத்தவரை புதிய பாதுகாப்பு கட்டமைப்பில் முக்கியத் தூணாக தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் செயல்படும். இது கீழ்க்கண்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
- இந்திய அரசியல் சட்டத்தின்படி பயங்கரவாத எதிர்ப்பு என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும்.
- பயங்கரவாதிகள் நாடுகளுக்கு இடையிலான எல்லைகளையோ அல்லது ஒரு நாட்டின் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளையோ மதிப்பதில்லை.
- பல பயங்கரவாத அமைப்புகள் பல்வேறு நாடுகளில் கால் பதித்துள்ளன. இவை எல்லைகளைத் தாண்டி பயங்கரவாத செயல்களை நடத்தும் திறனைப் பெற்றுள்ளன.
- பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு மனிதவளங்கள் மட்டும் போதுமானவை அல்ல. பயங்கரவாத ஒழிப்பில் தொழில்நுட்பம் என்பது முக்கிய ஆயுதம் ஆகும்.
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
- இந்தியா 7516 கிலோ மீட்டர் நீள கடல் எல்லையைக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூடான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகிய 7 நாடுகளுடன் 17106 கிலோ மீட்டர் நீள சர்வதேச எல்லையைக் கொண்டிருக்கிறது. எனவே கடல் வழியாகவும், வான் வழியாகவும் நமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள சர்வதேச அமைப்புகளுடனும், மாநில பயங்கரவாத தடுப்பு அமைப்புகளுடனும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.
- தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்படவில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங் தெளிவாக விளக்கிய போதிலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் அதை ஏற்கவில்லை.
- தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்திற்கு சிலர் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர். பலர் நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவைத் தெரிவித்தனர். மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள் மட்டும் இந்த யோசனையை அடியோடு நிராகரித்தனர். இந்த மாநாட்டில் முதலமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து மத்திய அரசு மிகவும் கவனமாக ஆராயும். அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஆதாரம்: நக்கீரன்
Social Plugin