தேடல் பெட்டகம்

குழந்தை விற்பனை


                                               குழந்தை விற்பனை

  • தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டுக் குழந்தைகளோடு இந்தியச் சிறுவர்களையும் சேர்த்து இந்தியாவில் 1.3 மில்லியன் சிறுவர் - சிறுமியர் பாலியல் வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வறுமையான சூழ்நிலையிலிருந்து வந்த இந்தச் சிறுவர் -  சிறுமியர்கள் வளமான சூழ்நிலையில் இருப்பவர்களிடம் விற்கப்படுகின்றனர். (Soma Wadhwa, "For Sale: Childhood," Outlook, 1998)

  • பல நாடுகளுக்குள் நடக்கும் குழந்தைகள் விற்பனையில் இந்திய நாடு வாங்கும் நாடாகவும், விற்கும் நாடாகவும், குழந்தை விற்பனையாளர்கள் தங்கிச் செல்லும் நாடாகவும் இருக்கிறது. பங்களாதேஷ், நேபால் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா குழந்தைகளை வாங்குவதும், பெண்களையும், குழந்தைகளையும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதும் தினந்தோறும் நடைபெறுகிறது. (Executive Director of Sanlaap, Indrani Sinha, Paper on Globalization and Human Rights)

  • தெற்காசிய நாடுகளுக்கு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை விற்பதில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முக்கிய மையங்களாக உள்ளன. (Masako Iijima, "S. Asia urged to unite against child prostitution," Reuters, 19 June 1998)

  • 1996 ஆம் ஆண்டு மும்பை நகரின் விபச்சார விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 484 பெண்கள் மீட்கப்பட்டனர். அதில் 40 சதவிகிதப் பெண்கள் நேபாள நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள். (Masako Iijima, "S. Asia urged to unite against child prostitution," Reuters, 19 June 1998)

  • இந்திய நாட்டைப் பொறுத்தவரை, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் விபச்சாரப் பெண்களை மிக அதிக அளவில் வழங்கும் மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. பீஜப்பூர், பெல்காம், கோலாப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள விபச்சாரப் பெண்கள் வேறு பெரிய நகரங்களுக்குச் செல்கின்றனர். இது ஒரு சீரான விற்பனை இணைப்பு மையமாகச் செயல்பட்டு வருகிறது. (Central Welfare Board, Meena Menon, "The Unknown Faces")

  • தேவதாசி மண்டலம் (Devadasi Belt) என்றழைக்கப்படுகின்ற மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில எல்லைப்புறங்களில் விற்பனை பல நிலைகளில் நடக்கின்றது. இந்த மாநிலப் பெண்கள் கணவன் கைவிட்டதாலோ அல்லது பலவந்தமாகவோ விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பலர் எல்லம்மா என்ற பெண் கடவுளுக்காக நேர்ந்து விடப்பட்ட தேவதாசிகளாவர். கர்நாடகாவில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் உள்ள 15 பெண்களும் தேவதாசிகளாவர். (Meena Menon, "The Unknown Faces")

  • பங்களாதேஷைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் அயல்நாட்டு சிறைச் சாலைகளிலும் முகாம்களிலும் அடைபட்டு தம் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர். பலர் பல ஆண்டுகளாகச் சிறைப்பட்டு விடுதலைக்காகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் பின்வரும் இடங்களில் 26 பெண்கள், 27 இளம் பெண்கள், 71 சிறுவர்கள் மற்றும் 13 குழந்தைகள் (பாலினம் தெரியாதவர்கள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை: லிலுவா முகாம் (Liluah Shelter) கல்கத்தா, ஷிகா முகாம் (Sheha Shelter) கல்கத்தா, ஆனந்தோ ஆஸ்ரமம் கல்கத்தா, அலிப்பூர் சிறுவர்கள் இல்லம் டெல்லி, நிர்மல் செயா சிறுவர்கள் இல்லம் டெல்லி, பிராயாஸ் சிறுவர் கண்காணிப்பு இல்லம் டெல்லி, திகார் சிறைச்சாலை டெல்லி, உதவும் கலங்கர், பெங்களுரு, உமர் காதி, பெங்களுரு, கிஷாலே, மேற்கு வங்காளம் மற்றும் பகராமபூர் ஆகிய இடங்கள். (Fawzia Karim Firoze and Salma Ali of the Bangladesh National Women Lawyer Association," Bangladesh Country Paper: Law and Legislation")

  • இந்தியாவிலிருந்து பெண்களும் குழந்தைகளும் தினந்தோறும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்காவும், விபச்சாரத்திற்காகவும் அனுப்பப்படும் பெண்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். (Indrani Sinha, Sanlaap India, "Paper on Globalization and Human Rights")

  • மும்பையில் மனித விற்பனைச் சந்தையில் 9 வயதுள்ள குழந்தைகள் ரூ. 60,000 அல்லது US$2000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறார்கள். கன்னிப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதலால் “gonorrhea and syphilis” போன்ற வியாதிகளை நீக்கும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள அரபியர்கள், இந்திய ஆண்களுக்கு எதிராக இத்தகைய சந்தையில் ஏலம் கேட்கிறார்கள். (Robert I. Freidman, "India's Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996)

  • இந்திய விபசார விடுதிகளின் பிடியில் 1,60,000 நேபாள பெண்கள் இருக்கிறார்கள். (Executive Director of Sanlaap, Indrani Sinha, Paper on Globalization and Human Rights")

  • ஏறத்தாழ 50000 பெண்களில் மும்பையிலுள்ள விபசார விடுதிகளில் 50 சதவிகிதத்தினர் ‘நேபாள நாட்டுப் பெண்களாக இருக்கிறார்கள்’. (Robert I. Freidman, "India‚s Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996)

  • இந்திய விபசார விடுதிகளின் பிடியில் 1,00,000 முதல் 1,60,000 வரை நேபாள பெண்களும் இளம் பெண்களும் சிக்கியுள்ளனர். இதில் 35 சதவிகிதத்தினர் திருமணப் போர்வையிலும், நல்ல வேலை என்ற போர்வையிலும் விபசார விடுதியில் இருக்கின்றனர். (Radhika Coomaraswamy, UN Special Report on Violence Against Women, Gustavo Capdevila, IPS, 2 April 1997)

  • 5000 முதல் 7000 நேபாள பெண்கள் தினந்தோறும் இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றனர். இந்திய விபசார விடுதிகளில் 1,00,000 முதல் 1,60,000 நேபாள இளம்பெண்கள் இருக்கிறார்கள். 45,000 நேபாளப் பெண்கள் கொல்கத்தா விபசார விடுதியிலும் இருக்கின்றனர். (Women's Groups in Nepal, Trafficking in Women and Children: The Cases of Bangladesh, pp.8 & 9, UBINIG, 1995)

  • மும்பையிலிருந்து பாகிஸ்தானுக்கு குழந்தைகள் மற்றும் பெண்களைக் கடத்துபவர்களுக்கு கொல்கத்தா ஒரு நல்ல தங்கிச் செல்லும் இடமாக அமைந்துள்ளது. பங்களாதேசத்திலிருந்து விற்பனைக்குட்படுத்தப்படும் பெண்களில் 99 சதவீதப் பேர் தரை வழியாகவே கடத்தப்படுகிறார்கள். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் எல்லைப் புறங்களான, ஜேசோர் (Jessore)  சட்கிரா (Satkhira) மற்றும் ராஜ்ஷாகி (Rajshahi) போன்ற பகுதிகள் இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. (Trafficking in Women and Children: The Cases of Bangladesh, pp.18 & 19, UBINIG, 1995)

  • இந்திய நாட்டு முகாம்களில் பங்களாதேசத்தைச் சேர்ந்த பாலியல் வியாபாரத்திற்காக விற்கப்பட்ட 200 பெண்களும் குழந்தைகளும் மீண்டும் தன் நாட்டிற்குச் செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5000 பெண்கள் முதல் 7000 பெண்கள் வரை நேபாள பெண்கள் ஆவர். கடந்த பத்தாண்டுகளாக இவ்வாறு விற்கப்படும் இளம்பெண்களின் வயது 14 முதல் 16 வரை இருந்தது. ஆனால் அது இப்போது 10 முதல் 14 வரை எனக் குறைந்து விட்டது. (CATW - Asia Pacific, Trafficking in Women and Prostitution in the Asia Pacific)

  • மும்பையிலுள்ள ஒரு விபச்சார விடுதியில் நேபாள பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். அப்பெண்களின் பொன்னிறத்திற்காகவும் இணக்கமான நடத்தைக்காவும் அவர்களை ஆண்கள் விரும்பி விலைக்கு வாங்குகின்றனர். (Robert I. Freidman, "India‚s Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996)

  • இந்தியாவிலுள்ள விபச்சாரப் பெண்களில் 2.5 சதவீதம் பேர் நேபாளப் பெண்களாகவும், 2.7 சதவீதம் பேர் பங்களாதேசத்துப் பெண்களாகவும் இருக்கிறார்கள். ("Devadasi System Continues to Legitimise Prostitution: The Devadasi Tradition and Prostitution," TOI, 4 December 1997)

  • சில இந்திய ஆண்கள், தலையில் எக்ஸிமா (scalp eczema) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட விலை மாதர்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். அழகிய வடிவான குழந்தைகளை தவணை முறையில் நிரந்தர வருமானம் என்ற நிபந்தனையுடன் பெற்றோர்களே விபச்சாரத்திற்காக விற்கும் அவலமும் நடைபெறுகிறது. (Robert I. Freidman, "India‚s Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996).

  • ஒரு உயர்தரமுடைய மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, நல்ல பணம், நல்ல பொழுதுபோக்கு என்பதனால், சீராக திட்டமிடப்பட்ட குற்றங்களில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புவதாக 70 சதவீத மாணவர்கள் கூறியுள்ளனர். [Robert I. Freidman, "India‚s Shame: Sexual Slavery and Political Corruption Are Leading to An AIDS Catastrophe," The Nation, 8 April 1996]

Your Image Description