தேடல் பெட்டகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக உதவி மைய எண்

 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண்

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் "1800 599 1500" என்ற 11 இலக்க எண் கடந்த 09.03.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149-ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை 9

Your Image Description