பள்ளி வாகனங்களுக்கான தனிப்பட்ட வழிகாட்டுதல்கள்
- குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களில் சம்பந்தமில்லாத நபர் யாரும் இருக்கக்கூடாது.
- குழந்தைகளை எங்கும், எந்தக் காரணத்திற்காகவும் நடுவில் இறக்கி விடக்கூடாது.
- பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு இருக்க வேண்டும்.
- வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் பெரிய எழுத்துகளில் பள்ளிக் கூடப்பணி (On school Duty) என்று எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
- வேகக் கட்டுப்பாடு (Speed Governor) சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்
- தேவையான பொருட்களுடன் முதல் உதவிப் பெட்டி தயாராக இருக்க வேண்டும்.
- வாகனத்தின் ஜன்னல்களில் நெருக்கமான குறுக்குக் கம்பிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
- தீயணைப்பான்கள் இருக்க வேண்டும்.
- பள்ளியின் பெயர், நிர்வாகனத்தினரின் தொலைபேசி எண்கள் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
- வாகனங்களில் கதவுகளில் தரமான, பாதுகாப்பான பூட்டுகள்/ பூட்டும் முறை இருக்க வேண்டும்.
- இருக்கைகளுக்கு அடியில் பைகளை வைக்க போதிய இடம் இருக்க வேண்டும்.
- வாகனத்தில் குழந்தைகளின் பாதுகாப்புப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பணியாளர் இருக்க வேண்டும்.
- அவ்வப்போது ஆசிரியர், பெற்றோர் போன்ற ஒருவர் வாகனத்தில் பயணம் செய்து கண்காணிக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள் கனரக வாகனங்கள் இயக்குவதில் 5 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
- வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை மதிக்காது இருந்து அல்லது சாலை விதிகளை (Lane discipline) கடை பிடிக்காமல் வருடத்தில் இரண்டு தடவைக்கு மேல் தண்டிக்கப்பட்டு இருந்தால் / அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அவரைப் பணியில் அமர்த்தக்கூடாது.
- வாகன ஓட்டிகள், அதிக வேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், மற்றும் சாலை விதிகளை மீறி ஆபத்தாக ஒட்டுதல் போன்ற ஏதாவது ஒரு குற்றத்திற்காக ஒருமுறை தண்டிக்கப் பட்டிருந்தாலும் அல்லது அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை பள்ளி வாகனங்களில் பணி அமர்த்தக்கூடாது.
- எழுதும் போதும், படிக்கும் போதும் இவை நன்றாக இருக்கின்றன. இந்த வழிகாட்டி நெறிகளை நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல் உள்ளன. ஒவ்வொரு குடிமகனும் குழந்தைகளின் நலம் கருதி சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஆதாரம் : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை காவல்துறை
Social Plugin